பொது மருத்துவம்

கண்களை பாதுகாக்கும் லாக்ரிமல் சுரப்பி

Published On 2023-10-09 06:22 GMT   |   Update On 2023-10-09 06:22 GMT
  • காற்று மண்டலத்தில் இருந்து ஆக்சிஜனையும் கருவிழிகள் நேரடியாக பெறுகிறது.
  • சுரப்பியிலிருந்து வரும் நீர், கண்களை பாதுகாக்கிறது.

நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இயங்குவதற்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன், ரத்தத்தின் மூலமே கடத்தப்படுகிறது. ஆனால் கண்ணில் உள்ள கருவிழிகளுக்கு மட்டும் ரத்தம் பாய்வதில்லை. பின்பு எப்படி தேவையான ஊட்டச்சத்து கண்களுக்கு கிடைக்கிறது என்று தெரியுமா?

கண்ணீர் மூலமே ஊட்டச்சத்துகளையும், காற்று மண்டலத்தில் இருந்து ஆக்சிஜனையும் கருவிழிகள் நேரடியாக பெறுகிறது. அதனால், கண்ணீர் நமது கண்ணுக்கு அவசியமானது. லாக்ரிமல் என்ற சுரப்பி கண்ணீரை உற்பத்தி செய்கிறது. இந்த சுரப்பி, கண்ணின் பக்கவாட்டு முனைக்கு மேல் சுற்றுப்பாதையில் அமைந்துள்ளது. இது தோராயமாக 2 செ.மீ. நீளம் கொண்டது.

லாக்ரிமல் சுரப்பியில் அதிகப்படியான திரவம் சுரக்குமானால், அவை கண் குழாய்கள் வழியாக மூக்கின் நாசி குழிக்குள் சென்று விடுகிறது. கண்ணில் தூசி விழுந்தால், கண்ணில் உள்ள விழி, லென்ஸ் போன்ற பகுதிகளில் கீறல் உண்டாகி, பார்வைத்திறனில் பாதிப்பு ஏற்படுத்தும். சுரப்பியிலிருந்து வரும் நீர், கண்களில் விழும் தூசியை சுத்தம் செய்து கண்களைப் பாதுகாக்கிறது.

பாக்டீரியாவை எதிர்ப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன்மூலம் கண்களை பராமரிப்பதில் கண்ணீருக்கு அளவில்லாத பங்கு உண்டு. லாக்ரிமல் சுரப்பிகள் குறைவான கண்ணீர் திரவத்தை உற்பத்தி செய்தால் வறட்சி, அரிப்பு மற்றும் கண்களில் எரிதல் ஆகிய பாதிப்புகள் உண்டாகும்.

Tags:    

Similar News