பொது மருத்துவம்

என்றும் இளமையுடன் இருக்க `ஒயிட் டீ'

Published On 2023-10-30 09:02 GMT   |   Update On 2023-10-30 09:02 GMT
  • குருத்துகளை பறித்து பதப்படுத்தாமல் தயாரிக்கப்படுவதே ஒயிட் டீ.
  • ஒயிட் டீ பல்வேறு மருத்துவ பண்புகள் கொண்டதாகும்.

தேயிலை செடியில் உள்ள இலைகளின் இளம் குருத்துகளை பறித்து, அதிகமாக பதப்படுத்தாமல் தயாரிக்கப்படுவதே ஒயிட் டீ. தேயிலை செடியின் இலைகள் குருத்துகளாக இருக்கும்போது, முடிகள் போன்ற வெள்ளை நிற இழைகளால் மூடப்பட்டிருக்கும். அந்த பருவத்திலேயே, இந்த இலைகள் பறிக்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் இதற்கு 'ஒயிட் டீ' என்ற பெயர் உண்டானது.

ஒயிட் டீ பல்வேறு மருத்துவ பண்புகள் கொண்டதாகும். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். சருமம். இதயம் மற்றும் மூளை போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செரிமானத்தை சீராக்கும். புற்றுநோயை தடுக்கும். உடல் எடையை குறைக்க உதவும். ஒயிட் டீ தரக்கூடிய பல்வேறு நன்மைகள் இங்கே...

சரும பாதுகாப்பு:

ஒயிட் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் உடலில் உள்ள ஃபிரீரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது. சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற புரதங்களை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள பாலிபீனால்கள் சருமத்தின் இளமை மற்றும் மிருதுவான தன்மையை பாதுகாக்கிறது.

ஒயிட் டீயில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்க வயதான தோற்றம் உண்டாவதை தாமதப்படுத்தும். தோல் நோய்களால் சருமம் சிவப்பதையும், வீங்குவதையும் குறைக்கும். தினமும் 2 கப் ஒயிட் டீ குடுப்பதால் சருமம் சுத்தமாகும்.

எடை குறைப்பு:

ஒயிட் டீ, உடலில் தேங்கி இருக்கும் கெட்டக் கொழுப்பை எரிக்க உதவும். புதிய கொழுப்பு செல்கள் உருவாகுவதைத் தடுக்கும். இதில் காணப்படும் கேட்சின்கள் செரிமான செயல்முறைகளை துரிதப்படுத்தும்.

தலைமுடியின் ஆரோக்கியம்:

ஒயிட் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் முடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கும். பாக்டீரியாவால் ஏற்படும் உச்சந்தலை தோல் நோய்களை குணப்படுத்தும். முடி வறட்சியை தடுத்து கூந்தலுக்கு இயற்கையான பொலிவை அளிக்கும். ஒயிட் டீயில் காணப்படும் எல்-தியானைன் எனும் ரசாயனம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

பற்கள் பாதுகாப்பு:

ஒயிட் டீயில் பிளேவனாய்டுகள், டானின்கள் மற்றும் புளோரைடுகள் உள்ளன. இவை பற்கள் ஆரோக்கியமாகவும். வலுவாகவும் இருக்க உதவுகின்றன. பல் சிதைவு மற்றும் பிளேக் உருவாகுவதை தடுக்கின்றன. ஒயிட் டீயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றன.

சர்க்கரை நோய் கட்டுப்பாடு:

ஒயிட் டீயில் உள்ள கேடசின்கள் மற்றும் பிற ஆக்சிஜனேற்றிகள், டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஒயிட் டீ ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைத்து இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதய பாதுகாப்பு:

ஒயிட் டீ இதயத்தில் ஏற்படும் ரத்த உறைவு, பக்க வாதம் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட நோய்களைத் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தைக்குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

ஒயிட் டீ தயாரிப்பு:

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து அந்த தண்ணீரில் 2 டீஸ்பூன் ஒயிட் தேயிலை இலைகளை சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து அந்த இலைகளை வடிகட்டி ஒரு கோப்பையில் தேநீரை ஊற்றி குடிக்கவும். இனிப்பு சேர்க்காமல் குடிப்பது நல்லது.

Tags:    

Similar News