null
தலையில் பூச்சிவெட்டு, புழுவெட்டு ஏற்பட என்ன காரணம் தெரியுமா?
- தலைமுடியை மென்மையாக சீவ வேண்டும்.
- உச்சி வெயிலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
புழுவெட்டு (அலோபேசியா) என்பது 'தன்னுடல் எதிர்ப்பு வகை நோய்' ஆகும். இது தலை அல்லது உடலின் எந்த பாகத்தையும் பாதிக்கலாம். குறிப்பாக ஆண்களுக்கு மீசை, தாடி பகுதிகளிலும் ஏற்படும்.
புழுவெட்டு என்பது முடிகள் முழுவதும் உதிர்ந்து வட்ட வடிவமான வழுக்கைத் திட்டுகள் தலை, தாடி, மீசை, புருவங்களில் ஏற்படுவது ஆகும். அந்த இடம் வழவழப்பாக இருக்கும். முடிகள் உதிர்வதற்கு முன் தோலில் அரிப்பு அல்லது வலி ஏற்பட்டு திடீரென முடி உதிர்தலை ஏற்படுத்தி வழுக்கையை உருவாக்குகிறது.
ஆனால் இது தற்காலிகமானது ஆகும். பூஞ்சைகளால் ஏற்படும் வழுக்கை திட்டுகளில், கடுமையான அரிப்பு, முடி உதிர்தல், உடைந்த முடி, வெண்நிற சிறு துகள்கள் உதிரல், அந்த இடம் சிவத்தல், வீக்கம் மற்றும் சில நேரங்களில் கசிவுடன் காணப்படும்.
தலைமுடி பாதுகாப்பு வழிமுறைகள்:
பரந்த பல் கொண்ட சீப்பு வைத்து தலைமுடியை மென்மையாக சீவ வேண்டும். தலைமுடி ஈரமாக இருக்கும் போது, துவட்டுவதற்கு மெல்லிய துண்டுகளை பயன்படுத்த வேண்டும். தலைமுடியைப் பாதுகாக்க உச்சி வெயிலில் நடப்பதை தவிர்க்க வேண்டும். புகைப்பிடிக்க கூடாது.
வயதாகும் போது தலை முடியின் வேர்கள் பலவீனம் அடைவது, நீரிழிவு மற்றும் லூபஸ் போன்ற சில உடல் பாதிப்புகள், மன அழுத்தம், குடும்ப பாரம்பரியத்தில் தாய்-தந்தை வகையில் வழுக்கை இருத்தல் போன்றவை முடி உதிர்வதற்கு காரணமாகிறது.