என்றும் இளமையாக இருக்க எளிய வீட்டுக்குறிப்புகள்!
- தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம்.
- கொலாஜன் என்பது சருமத்திற்கு மிகவும் முக்கியமான புரதம்.
என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசை ஆகும். சிலர் தோல் சுருங்கி முதுமை தெரியக்கூடாது எனவும் உடல் வலிமை குறைந்துவிடக்கூடாது எனவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள்.
நாம் வயதாகும் போது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நம்மை வழிநடத்திக் கொள்வது மிக மிக முக்கியமாகும். வாழ்க்கையில் முதுமை என்பதே இல்லாமல் இளமை மட்டுமே இருக்க வேண்டும் என்றால் அது நடக்காது. ஆனால் முதுமையிலும் இளமையாக காட்சியளிக்க முடியும்.
வயது அதிகரித்ததே தெரியாமல் முதுமை தோற்றத்தை மெதுவாக்கி இளமையோடு காட்சியளிக்க சில வழிகள் உள்ளன.
சிறந்த உடல் செயல்பாடு, சுறுசுறுப்பான ஈடுபாடு, இளமையான தோற்றம் என்பதே அனைவரின் ஆசை.
உடற்பயிற்சி
தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்பவர்கள் இதய நோயில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் மூட்டுவலி குறைவது மட்டுமல்லாது மன ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
வயதான அறிகுறிகளை குறைக்க உதவும் முக்கிய செயல்முறைகள்:
* தினசரி காலையில் 5-6 பாதாம், 2 வால்நட்ஸ்களை தொடர்ந்து சாப்பிடுங்கள். இது உடலுக்கு வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு வழங்க வழிவகைச் செய்யும்.
* காலை உணவில் கோகோ ஸ்மூத்தியைக் குடிக்கவும், இது உடலுக்கு ஆக்ஸிஜனேற்றிகளை வழங்கும்.
* கோகோவில் ஏராளமான ஃபிளாவனாய்டுகள் இருப்பதால், அதில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
* இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், 5 சொட்டு ஆளிவிதை எண்ணெயை எடுத்து, அதைக்கொண்டு முகத்தை மசாஜ் செய்யவும். இது சருமத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
* உங்கள் உணவில் கொலாஜன் சப்ளிமெண்ட்களை சேர்க்கவும். கொலாஜன் என்பது சருமத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு புரதமாகும்.
* சருமத்திற்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க பாஸ்த்ரிகா பிராணயாமா பயிற்சி செய்யுங்கள்.
* ஒரு டம்ளர் எலுமிச்சை நீரில் 1 டீஸ்பூன் சியா விதைகளை சேர்த்து உட்கொள்ளுங்கள். இது உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்கும்.
* ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். மேலும், தசைகளை பராமரிக்க, 2-3 மணி நேரம் வலிமை பயிற்சி செய்யுங்கள்.
* நீர்ச்சத்துடன் இருங்கள் மற்றும் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். அதனால் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற முடியும்.