உள்ளூர் செய்திகள்

குளத்தில் மண் கொட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

நீர் கொள்ளளவு குறைவதை தடுக்க நாகல்குளத்தின் நடுவே பாலம் அமைக்க வேண்டும்- சமூக ஆர்வலர் மனு

Published On 2023-06-28 09:06 GMT   |   Update On 2023-06-28 09:06 GMT
  • குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு குறைய வாய்ப்புள்ளது.
  • குளம், ஏரிகளின் பரப்பளவையோ குறைக்கும் செயலில் ஈடுபடுவது சட்டவிரோத குற்றமாகும்.

தென்காசி:

தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை விரி வாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நாகல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தின் மீது சாலையின் இடது பக்கம் சுமார் 25 அடியும், வலது பக்கம் சுமார் 50 அடியும் சாலை அமைப்பதற்காக பணிகள் நடை பெற்று வருகிறது. இதற்காக சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவு கையகப் படுத்த ப்பட்டு மண்ணைக் கொட்டி சாலை அமைக்கின்றனர்.

இந்த குளத்தின் நீர் பாசனத்தை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும், நீர் ஆதாரத்திற்காக ஏராளமான பொதுமக்களும் இருந்து வரும் நிலையில் தற்போது குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு குறைய வாய்ப்புள்ளது என அப்பகுதியினர் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே குளத்தின் மேலே பாலம் அமைத்து சாலை அமைக்க வேண்டும் என்பது அவர் களின் கருத்தாக உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு தமிழக அரசு ஆக்கிரமிப்பு களில் இருந்து நீர் நிலை களை பாதுகாக்க குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிர மிப்புகள் அகற்றும் சட்ட த்தை கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாடு ஏரி களை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றல் சட்டம் 2007 -ன் படி நீர்நிலைகள் அதாவது குளம் மற்றும் ஏரிகளின் பரப்பளவையோ அல்லது நீரின் கொள்ளளவையோ குறைக்கும் செயலில் ஈடுபடுவது சட்டவிரோத குற்றமாகும்.

எனவே இந்த சட்டவிரோத செயலில் தலையிட்டு சாலை அமைக்கும் பணியை நிறுத்தி குளத்தின் நடுவே மேம்பாலம் அமைத்து நீர்நிலை ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும், பா.ஜனதா மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளருமான மருது பாண்டியன், தமிழ்நாடு கோட்ட பொறியாளர் மற்றும் சாலை மேம்பாட்டு வாரிய அலுவலகங்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

Tags:    

Similar News