உள்ளூர் செய்திகள் (District)

கால்நடை மருத்துவ முகாம்

Published On 2022-11-10 09:10 GMT   |   Update On 2022-11-10 09:10 GMT
  • கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
  • 356 பசுக்கள், 800 ஆடுகளுக்கு சிகிச்சை

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த பூண்டி கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமை ஊராட்சி தலைவர் சுந்தராம்பாள் சாம்பசிவம் தொடக்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ஹமீதுஅலி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் அரியலூர் சொக்கலிங்கம் கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திகேயன், ராஜா, கார்த்திகேயன் , கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மாரிமுத்து, இளங்கோவன் , செல்வராஜ் மற்றும் நசீமா ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, 356 பசுக்கள், 620 வெள்ளாடுகள், 180 செம்மறியாடுகள், 250 கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

200 கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் மற்றும் 13 மாடுகளுக்கு சினை பரிசோதனையும் செய்யப்பட்டது.

நீண்ட நாட்களாக சினைப் பருவ அறிகுறிகள் தென்படாமல் இருக்கும் கிடேரிகள் மற்றும் பலமுறை கருவூட்டல் செய்தும் சினை பிடிக்காத எட்டு மாடுகள் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு அவற்றிற்கு மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News