உள்ளூர் செய்திகள்

தென்காசியில் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-11-27 08:59 GMT   |   Update On 2023-11-27 08:59 GMT
  • பேரணியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
  • பேரணியில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி சென்றனர்.

தென்காசி:

தென்காசியில் சமூகநலத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் வரதட்சணை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட சமூக நல அலுவலர் மதி வதனா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிர மணியம் ஆகியோர் உடன் இருந்தனர். அனைவரும் பாலின வன்முறை தவிர்த்தலுக் கான உறுதிமொழி ஏற்றனர்.

இந்த பேரணியில் வரதட்சணையை ஒழிப்போம். பாலின வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம். பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை புறக்கணிப்போம், பெண்களுக்கான உதவி எண் 181 என்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு கோஷமிட்டபடி சென்றனர். பேரணியில் சகி ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்னபால் சாந்தி, பெண்கள் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள், ஒன் ஸ்டாப் சென்டர் பணியா ளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News