உள்ளூர் செய்திகள்

கீழப்பாவூர் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு கொளுத்தப்பட்ட சொக்கப்பனையை படத்தில் காணலாம். 

தென்காசி கோவில்களில் சொக்கப்பனை தீபம் கொளுத்தப்பட்டது

Published On 2023-11-27 08:59 GMT   |   Update On 2023-11-27 08:59 GMT
  • காசி விஸ்வநாதர் கோவில் முன்பு சிறப்பு பூஜைகளுடன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • செங்கோட்டை சுற்றுப்பகுதியில் பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தென்காசி:

கார்த்திகை திருநாளையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு சிறப்பு பூஜைகளுடன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோன்று கீழப்பாவூர் மைதானத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

இதேபோல் பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சொக்கபனையை ஏற்றும் நிகழ்ச்சியை தொழிலதிபர் ஆர்.கே. காளிதாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர் தினசரி மார்க்கெட் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவிலில் நேற்று இரவு செக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதுபோன்று கடையநல்லூரில் உள்ள முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவில், கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோவில், கருப்பசாமி கோவில், மேல கடையநல்லூர் கட காளீஸ்வரர் கோவில், அண்ணாமலைநாதர் கோவில், பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவில் ஆகிய கோவில் களில் சொக் கப்பனை கொளுத்தப் பட்டது.

செங்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள சிவன்கோவில், பிள்ளையார் கோவில், முப்புடாதி அம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சாலையில் அமைக்க பெற்ற சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

சிவகிரி அருகே கூடலூர் நாதகிரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கூடலூர் அன்னதான அறக்கட்டளை சார்பில் ஊர் தலைவர் குருசாமி பாண்டியன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அய்யப்பா சேவா சங்கம் சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் கலந்து கொண்டார். ஒன்றிய கவுன்சிலர் அருணாதேவி பாலசுப்பிரமணியன், நாச்சியார் அன்கோ, அரசு ஒப்பந்ததாரர் விஜயகுமார், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிவகிரி கூடாரப்பாறை ஸ்ரீபால சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்பத்தினர் செய்து இருந்தனர். சிவகிரியில் கருப்பாயி நாச்சியார் அறக்கட்டளைக்கு பாத்தி யப்பட்ட வள்ளி, தெய்வானை ஆறுமுகம் நயினார் கோவில் முன்பாக சொக்கப்பனை தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

முக்கூடல் ஸ்ரீமுத்துமாலை கோவில், நாராயணசாமி கோவில், சடையப்பபுரம் சக்தி விநாயகர் கோவில், சந்தன மாரியம்மன் கோவில் மற்றும் பல கோவில்களில் திருக்கார்த்தி கை சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

சேரன்மகாதேவி கொளுந்து மாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியில் 2 தீபம் ஏற்றப்பட்டது.

ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு நேற்று இரவு கார்த்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து சொக்க பனை கொளுத்தப்பட்டது. உச்சியில் இருந்த மாவிளக்கை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் குருவன் கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேகமாக பனையில் ஏறி பின்பு சாகவாசமாக அமர்ந்து மாவிளக்கை எடுத்து கீழே எடுத்து வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News