உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது- தென்காசி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

Published On 2023-11-26 14:17 IST   |   Update On 2023-11-26 14:17:00 IST
  • புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களின் கடையும் உணவு பாதுகாப்பு அதிகாரி மூலம் சீல் வைக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புகையிலை பொருட்கள்

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கத்தினரிடம் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எடுத்துக்கூறினார்.

அப்போது பேசிய போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன், அவரின் கடையும் உணவு பாதுகாப்பு அதிகாரி மூலம் சீல் வைக்கப்படும்.

குண்டர் சட்டம் பாயும்

பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறி யப்பட்டால் விற்பனை செய்தவர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் 94981 66566 என்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொலைபேசி எண்ணிற்கு நேரடியாக புகார் அளிக்கலாம்.

புகார் செய்பவர்களின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என கூறினார்.

இதேபோல் அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வர்த்தகர்களிடமும் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

Tags:    

Similar News