உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 தேர்வில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பாரத் கல்விக்குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் வெற்றிக் கோப்பையை வழங்கி பாராட்டினார்.அருகில் முதல்வர் பாலசுந்தர் உள்ளார்.

பிளஸ்-1 பொதுத் தேர்வில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மாணவர்கள் சாதனை

Published On 2023-05-21 08:35 GMT   |   Update On 2023-05-21 08:35 GMT
  • மாணவி மரியம் தமிழில் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
  • வேதியியல் பாடத்தில் மாணவி அனுசியா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தென்காசி:

பிளஸ்-1 பொதுத்தேர்வை இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவ-மாணவிகள் மொத்தம் 63 பேர் எழுதினர். மாணவி ஹரிணி சமஸ்கிருதத்தில் 99 மதிப்பெ ண்களும், ஆங்கிலத்தில் 95 மதிப்பெண்களும், வணிகவியலில் 76 மதிப்பெ ண்களும், கணக்குப் பதிவியலில் 92 மதிப்பெண்களும், பொருளியலில் 98 மதிப்பெண்களும், வணிக கணிதத்தில் 80 மதிப்பெண்களும் பெற்று முதலிடத்தில் சாதனை படைத்தனர். மாணவி மரியம் தமிழில் 92 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 91 மதிப்பெ ண்களும், இயற்பியலில் 92 மதிப்பெண்களும், வேதியலில் 94 மதிப்பெண்களும், உயிரியலில் 97 மதிப்பெண்களும், கணிதத்தில் 73 மதிப்பெண்களும் பெற்று 2-ம் இடத்தை பிடித்துள்ளார். மாணவி அனுசியா தமிழில் 75 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 86 மதிப்பெ ண்களும், இயற்பியலில் 97 மதிப்பெண்களும், வேதியலில் 100 மதிப்பெண்களும், உயிரியலில் 90 மதிப்பெண்களும், கணிதத்தில் 87 மதிப்பெண்களும் பெற்று 3-ம் இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் பாடவாரியாக தமிழில் 92 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 96 மதிப்பெ ண்களும், சமஸ்கிருதத்தில் 99 மதிப்பெண்களும், இயற்பியலில் 97 மதிப்பெண்களும், வேதியலில் 100 மதிப்பெண்களும், உயிரியலில் 97 மதிப்பெ ண்களும், பொருளியலில் 98 மதிப்பெண்களும், கணக்குப் பதிவியலில் 92 மதிப்பெண்களும் பெற்றுச் சாதனை படைத்தனர்.

பிளஸ்-1 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா, ஆலோசகர் உஷா ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News