உள்ளூர் செய்திகள்

ஆவினில் செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகம்

Published On 2023-05-09 07:25 GMT   |   Update On 2023-05-09 07:25 GMT
  • வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட பசும்பால் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • செறிவூட்டப்பட்ட பால் ஊதா நிற பால் பாக்கெட்டில் கிடைக்கும்.

சென்னை:

ஆவின் நிறுவனம் நீலம், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. மேலும் வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்ற பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

ஆவின் பால், பால் பொருட்கள், இனிப்பு வகைகள் தரமாக இருப்பதோடு தனியாரை விட விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு உள்ளது.

தனியார் நிறுவனங்களின் பால், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் ஆவினை விட பலமடங்கு அதிகமாக விற்கின்றன.

இந்நிலையில் தற்போது ஆவினில் செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட பசும் பால் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட பால் ஊதா நிற பால் பாக்கெட்டில் கிடைக்கும். அரை லிட்டர் பால் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News