உள்ளூர் செய்திகள்

தக்காளி விலை வீழ்ச்சிகரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால்

Published On 2023-03-21 13:07 IST   |   Update On 2023-03-21 13:07:00 IST
  • தக்காளி விலை வீழ்ச்சி கண்டுள்ளது
  • இல்லத்தரசிகள் மகிழ்ச்சி; விவசாயிகள் கவலை

கரூர்,

விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கரூர் மார்க்கெட்டுக்கு தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. இதனால், விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வடகிழக்கு பருவ மழை பெய்தது. இதனால், குறுகிய கால பயிரான தக்காளியை, விவசாயிகள், அதிக அளவில் சாகுபடி செய்தனர். தற்போது, மாநிலம் முழுவதும் தக்காளி நல்ல விளைச்சல் அடைந்துள்ளது.கரூர் மாவட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலுார் மற்றும் மதுரை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, தக்காளி விற்ப னைக்கு கொண்டுவரப்படுகிறது. வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.கடந்த பிப்ரவரி மாதம், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய் வரை விற்றது.வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது, கரூர், உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 14 ரூபாய் முதல், 16 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு தக்காளி விலை குறைவால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியும், விவசாயிகள் கவலையும் அடைந்துள்ளனர்.




Tags:    

Similar News