- மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- கார்த்திகை சோமவார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம். மானாமதுரை வைகைஆற்று கரையில் உள்ள ஆனந்த வல்லி-சோமநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு யாகம், சங்காபிஷேகம் நடந்தது. மாலையில் நந்தி, சோமநாதருக்கு பிரதோஷ காலத்தில் 16 வகை அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனையும், வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதேபோல் சிருங்கேரி சங்கரமடம் சந்திரமவுலீசுவரர், நாகலிங்கம் நகர் அண்ணாமலையார், ெரெயில் நிலையம் எதிரில் உள்ள பூரணசக்கரவிநாயகர் கோவிலில் உள்ள காசிவிசுவநாதர், இடைக்காட்டூர் மணிகண்டேசுவரர், வேம்பத்தூர் கைலாசநாதர், திருப்புவனம் புஸ்பவனேசுவரர், திருப்பாசேத்தி அழகேசுவரர், மேலெநெட்டூர் சொர்ணவாரீசுவரர், குறிச்சி வழிவிடு பெரிய நாச்சிகோவிலில் உள்ள காசியில் இருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த காசிவிசுவநாதர் ஆகிய கோவில்களில் கார்த்திகை சோமவார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.