உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி மார்க்கெட்டில் பீன்ஸ் விலை உயர்வு- கிலோ ரூ.90க்கு விற்பனை

Published On 2022-07-24 03:43 GMT   |   Update On 2022-07-24 03:43 GMT
  • கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வெளியூர்களில் பீன்ஸ் சாகுபடி அதிகமாக காணப்பட்டது.
  • வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் அதனை ரூ.25 முதல் 30 வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அதிகளவில் வருகிறது.

இதில் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வெளியூர்களில் பீன்ஸ் சாகுபடி அதிகமாக காணப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மற்றும் மே என சில மாதமாக அறுவடை செய்யப்பட்ட பீன்ஸ் மார்க்கெட்டுக்கு அதிகமாக கொண்டு வரப்பட்டது.

வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் அதனை ரூ.25 முதல் 30 வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர். தற்போது பல மாவட்டங்களில் மழைப்பொழிவு இருப்பதால் பீன்ஸ் சாகுபடி சற்று குறைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில வாரங்களாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பீன்ஸ் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் நேற்று மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.85 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News