இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது நாட்டுக்கே பெருமை- என்.ஆர்.தனபாலன் பாராட்டு
- ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற “நாட்டு நாட்டு” என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.
- இந்திய சினிமா உலகத்தரத்திற்கு உயர்ந்திருப்பது பெருமையாக உள்ளது.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விழா நடைபெற்றது. சினிமா துறையில் மிக உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "நாட்டு நாட்டு" என்ற பாடலுக்கும் தமிழில் வெளிவந்த "தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்" என்ற குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற "நாட்டு நாட்டு" என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்திய சினிமா உலகத்தரத்திற்கு உயர்ந்திருப்பது பெருமையாக உள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விருது கிடைத்துள்ளது. அதே நேரத்தில் "தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்" என்ற தமிழில் வெளியான குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்களின் கலைத்திறன் உலக அளவில் உயர்ந்து நிற்பதை எண்ணி நாடே பெருமை கொள்கிறது. இந்த விருது கிடைப்பதற்காக கடுமையாக உழைத்த அத்துணை கலைத்துறையை சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.