திருவெண்ணைநல்லூர் போன்நேரு மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி- 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
- திருவெண்ணைநல்லூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கபட்டது.
விழுப்புரம் :
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புஷ்பஸ்ரீ என்ற மாணவி 492 /500 மதிப்பெண்களை பெற்று முதலிடத்திலும் மகா என்ற மாணவி 488 மதிப்பெண்களைப் பெற்று 2-ம் இடத்திலும் தஷ்னி என்ற மாணவி 485 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்திலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மகேஸ்வரன் என்ற மாணவன் 539 /600மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்திலும் அருண்குமார் என்ற மாணவர் 525 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்திலும் ராம்குமார் என்ற மாணவர் 513 என்றும் மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இப்பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு போன்நேரு மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் வாசுதேவன், பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வாசுதேவன் ஆகியோர் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.