பஞ்சு இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - நூற்பாலையினர் வலியுறுத்தல்
- நூற்பாலை பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் பஞ்சு தேவை.
- 6 மாதங்களாகிய நிலையில் 155 லட்சம் பேல் பஞ்சு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
மங்கலம் :
நடப்பு பருத்தி ஆண்டில் (அக்டோபர் 2022 - செப்டம்பர் 2023), 315 லட்சம் பேல் பருத்தி விளைச்சல் இருக்கும் எனவும், 12 லட்சம் பேல் இறக்குமதி செய்யப்ப டும் எனவும் தொடக்க கையிருப்புடன் 399 லட்சம் பேல் பஞ்சு கிடைக்குமென கணக்கிடப்பட்டது. இந்திய பருத்தி கழகம் வெளியிட்ட ஆண்டறிக்கை யில், நூற்பாலை பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் பஞ்சு தேவை. சிறு, குறு தொழில்களுக்கு 19 லட்சம், நூற்பு இல்லாத தேவைக்கு 16 லட்சம், ஏற்றுமதி 41 லட்சம் பேல் என 359 லட்சம் பேல் தேவைப்படு மென தெரிவித்துள்ளனர்.
பருத்தி சீசன் துவங்கியதில் இருந்தே பருத்தி பஞ்சு வரத்து குறைவாக இருந்தது. சீசன் துவங்கி 6 மாதங்களாகிய நிலையில் 155 லட்சம் பேல் பஞ்சு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. அதிகபட்சமாக பிப்ரவரி - 33.77 லட்சம், மார்ச் - 30.07 லட்சம், நவம்பர் - 27.03 லட்சம், டிசம்பர் - 27.96 லட்சம், ஜனவரி - 26.66 லட்சம், அக்டோபர் - 9.71 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்து நூற்பாலைகள் தரப்பினர் கூறுகையில், நடப்பு பருத்தி ஆண்டில் சீசன் துவங்கிய ஆறு மாதங்க ளாகியும், உற்பத்தியான பஞ்சில் 50 சதவீதம் கூட விற்பனைக்கு வந்து சேரவில்லை. கூடுதல் விலை கிடைக்கும் என பஞ்சை விற்பனைக்கு எடுக்காமல் வைத்துள்ளனர்.பருத்தி வரத்தில் அசாதாரண சூழல் நிலவினாலும், விலை சீராக இருக்கிறது.
இருப்பினும் பஞ்சு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து பஞ்சு இறக்குமதி க்கான வரியை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்றனர்.