உள்ளூர் செய்திகள்

கோப்புடம்.

பாமாயிலுக்கு மீண்டும் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2022-10-28 06:34 GMT   |   Update On 2022-10-28 06:34 GMT
  • உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது.
  • உடுமலை கால்வாய் கரையில் 23 இடங்களில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது.

உடுமலை :

உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி, ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-

மவுனகுருசாமி:- உடுமலை கால்வாய் கரையில் 23 இடங்களில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேராத நிலை ஏற்படுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

மதுசூதனன்:- தொடர்ந்து தேங்காய் மற்றும் அதனைச்சார்ந்த பொருட்கள் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.இதனைத் தடுக்க ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்.கொப்பரையை அரசு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். பாமாயிலுக்கு மீண்டும் இறக்குமதி வரி விதிக்க வேண்டும். மேலும் உரக்கடைகளில் அதிக அளவில் ரசாயன உரங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. விலைப்பட்டியல், இருப்பு விவரம் உள்ளிட்ட எதுவும் முறையாக கடைபிடிப்பதில்லை. அதிகாரிகள் வெறும் கண்துடைப்புக்காக ஆய்வு செய்கின்றனர். குறைதீர் கூட்டங்களில் கொடுக்கப்படும் பல மனுக்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை.3 ஆண்டுகளாக மனு கொடுத்தும் பட்டா மாறுதல் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.

பரமசிவம்:- பல ஆண்டுகளாக நிலவும் ஜம்புக்கல் கரடு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதுடன் அதனை வியாபார நோக்கத்தில் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இதேப்போல் பல்வேறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.

Tags:    

Similar News