இந்தியா

ஒடிசாவில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன

Published On 2023-06-17 20:40 GMT   |   Update On 2023-06-17 20:40 GMT
  • ஒடிசாவில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
  • அங்கு விரைந்த அதிகாரிகள் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

புவனேஷ்வர்:

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 2-ம் தேதி பஹானாகா பஜார் நிலையத்தில் அடுத்தடுத்து 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 291 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள அம்படோலாவில் இருந்து லஞ்சிகரில் உள்ள வேதாந்தா லிமிடெட் ஆலைக்கு சரக்கு ரெயில் சிறப்பு வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது.

இந்த விபத்தில் உயிர் சேதம் அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்றும், சிறப்பு வழித்தடத்தில் தடம் புரண்டதால் ரெயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று ரெயில்வே அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தகவலறிந்து அங்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News