இந்தியா

அதிகாலையில் பயங்கரம்.. கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்

Published On 2024-08-12 03:31 GMT   |   Update On 2024-08-12 04:46 GMT
  • பராபர் மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாபா சித்தேஸ்வர் கோவிலில் சாவன் மாத சிற்பபுப் பூஜைகள் நடந்தன
  • கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லத்தியால் பக்தர்களை தாக்கியுள்ளனர்.

பீகார் மாநிலம் பராபர் மலையில் அமைந்துள்ள பாபா சித்தேஸ்வர் கோவிலில் இன்று அதிகாலை  ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பீகாரின் ஜெகன்னாபாத் மாவட்டத்தில் பராபர் மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாபா சித்தேஸ்வர் கோவிலில் வருடந்தோறும் சாவன் புனித மாதத்தில் நடக்கும் சிறப்புப் பூஜைகளில் ஏராளமானோர் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் அதிகபடியான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்த நிலையில் பூக்கடை அருகில் சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த போலீசார் லத்தியால் பக்தர்களை தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கூட்டநெரிசல் ஏற்பட்டதாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை போலீஸ் தரப்பு மறுத்துள்ளது.

 

இந்த கூட்டநெரிசலில் 3 பெண்கள் உட்பட உயிரிழந்த 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

Tags:    

Similar News