இந்தியா

யோகா... சமூகத்தின் அனைத்து நோய்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு- பாபா ராம்தேவ்

Published On 2024-06-21 06:19 GMT   |   Update On 2024-06-21 06:19 GMT
  • ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
  • அனைவரும் தினமும் யோகா பயிற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீநகர் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுடன் யோகா குரு ராம்தேவ் யோகாசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பலர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

இதையடுத்து யோகா குரு பாபா ராம்தேவ் கூறுகையில்,

யோகா என்பது சமூகத்தின் அனைத்து நோய்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு. அனைவரும் தினமும் யோகா பயிற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் யோகா முன்னேற்றம் அடைந்துள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News