ஏழ்மைக்கு எதிரான போரில் எனது அரசு தீவிரம் காட்டும்- பிரதமர் மோடி
- இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்.
- நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியனின் வாழ்வையும் மேம்படுத்துவதே இலக்கு.
மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் அடுத்த 20 வருடங்களுக்கு பாஜக ஆட்சி தான் நடைபெறும்.
காங்கிரசின் செயல்பாடுகள் பாஜகவை அடுத்த 20 வருடங்களுக்கு ஆட்சியில் வைத்திருக்கும்.
இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்.
நாட்டில் ஏழ்மைக்கு எதிரான போர் பிரகடனத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
அடுத்த 5 வருடங்களில் ஏழ்மைக்கு எதிரான போரில் எனது அரசு தீவிரம் காட்டும்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியனின் வாழ்வையும் மேம்படுத்துவதே இலக்கு.
ஆட்டோ பைலட் மோடில் நாடு தானாக பொருளாதாரத்தில் வளர்வதாக காங்கிரஸ் நினைக்கிறது.
கடந்த பத்து வருடங்களில் எங்களின் உழைப்பு ஒரு முன்னோட்டம் மட்டுமே.
சிறப்பான ஆட்சி என்பதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் உழைப்பு இருக்கும்.
வறுமையில் உள்ள மக்களை மீட்க எனது அரசின் வேகம் மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறினார்.
#WATCH | Speaking in Rajya Sabha, PM Modi says, "The next five years are to ensure saturation of basic facilities and for the fight against poverty. This country will emerge victorious against poverty in the next five years, and I am saying this based on the experience of the… pic.twitter.com/JntSGUs9id
— ANI (@ANI) July 3, 2024