பள்ளிக் கழிவறையில் தலைமை ஆசிரியருக்கு காத்திருந்த மரணம்.. 12 ஆம் வகுப்பு மாணவன் செய்த கொடூரம்
- எஸ்.கே.சக்சேனா (55 வயது) கடந்த 5 வருடங்களாக தலைமை ஆசிரியராக இருந்து வந்தார்.
- நெற்றியில் குண்டு பாய்ந்த சக்சேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தான் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரை சுட்டுக் கொலை செய்து அவரது ஸ்கூட்டரிலேயே 12 ஆம் வகுப்பு மாணவன் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் [Chhatarpur] மாவட்டத்தில் தாமோரா [Dhamora] அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக கடந்த 5 வருடங்களாக எஸ்.கே.சக்சேனா (55 வயது) இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று மதியம் 1:30 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற சக்சேனா மீது அதே பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளான். நெற்றியில் குண்டு பாய்ந்த சக்சேனா சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.
சம்பவத்தின்பின் சக்சேனாவின் ஸ்கூட்டரிலேயே 12 ஆம் வகுப்பு மாணவனும் அவனுடன் வந்த கூட்டாளியும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் காவல் கண்காணிப்பாளர் அகம் ஜெயின் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தப்பியோடிவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.