null
ஜம்மு- காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
- பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தால் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.
- பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
ஜம்மு காஷ்மீர்:
ஜம்மு-காஷ்மீரில் மலைப்பாங்கான மாவட்டத்தில் ஜூன் 11-12 தேதிகளில் இரட்டை பயங்கரவாத தாக்குதலில் 6 பாதுகாப்பு வீரர்கள் காயம் அடைந்தனர். இரட்டை தாக்குதல்களுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் தங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். மற்றும் மாவட்டத்தில் ஊடுருவி செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தால் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.
இந்த நிலையில் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்து பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.