null
இந்தியாவில் EVM-கள் கருப்பு பெட்டி மாதிரி.. ராகுல் காந்தி
- வாக்குப்பதிவு முறைகள் குறித்து கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன.
- ஊழல் செய்வதற்கான வழிகளும் அதிகரிக்கும் என்றார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழித்துக்கட்ட வேண்டும். மனிதர்கள் அல்லது ஏ.ஐ. போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்துவிட முடியும் என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, "இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருப்பு பெட்டி போன்றதாகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஆய்வு செய்ய முடியாது. எங்களது வாக்குப்பதிவு முறைகள் குறித்து கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன."
"பொறுப்பேற்க வேண்டிய அமைப்புகள் வெளிப்படையாக இல்லாத போது, ஜனநாயகம் போலியாவதோடு, ஊழல் செய்வதற்கான வழிகளும் அதிகரிக்கும்," என்று தெரிவித்துள்ளார். இத்துடன் வாக்குப்பதிவு இயந்திரத்தை மொபைல் போன் மூலம் திறக்க முடியும் என்ற செய்தி அடங்கிய செய்தித்தாளின் புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார்.