இந்தியா

பெண் டாக்டரின் வாழ்வை மாற்றிய எடை குறைப்பு

Published On 2024-07-20 03:44 GMT   |   Update On 2024-07-20 03:44 GMT
  • ஒரு கட்டத்தில் 120 கிலோ எடை இருந்த அவர் தற்போது கணிசமாக எடை குறைத்துள்ளார்.
  • பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடல் பருமன் மற்றும் எடை அதிகரிப்பு சமீப காலமாக பெரும் பிரச்சனையாகி வருகிறது. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் உடல் எடை குறைப்பு குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

எக்ஸ் தளத்தில் டாக்டர் வீ என்ற பெயர் கொண்ட அந்த பெண் டாக்டர் ஒரு சிறு நிகழ்வை தனது பதிவில் விவரித்துள்ளார். அதில், உடல் எடை குறைப்பு தனது வாழ்வை மாற்றியது எப்படி? என்பது குறித்து விளக்கி உள்ளார். மேலும் அந்த டாக்டர், தனது உடல் பருமன் புகைப்படத்தையும், தற்போது உடல் எடை குறைப்புக்கு பிறகான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

அதன்படி ஒரு கட்டத்தில் 120 கிலோ எடை இருந்த அவர் தற்போது கணிசமாக எடை குறைத்துள்ளார். அவரது பதிவில், சம்பவத்தன்று மெட்ரோவில் பயணம் செய்ய ரெயில் நிலையத்தின் கீழ் தளத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது மேல் தளத்தில் மெட்ரோ ரெயில் வரும் சத்தமும், அதற்கான அறிவிப்பும் கேட்கிறது. அந்த ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளையும் என்னால் பார்க்க முடிந்தது. அடுத்த ரெயில் வரும் வரை நான் காத்திருக்க விரும்பவில்லை.

5-10 வினாடிகளில் முதுகில் கணமான பேக்குடன் வேகமாக, உயரமான படிகளில் ஏறி, கூட்டத்தை தாண்டி மெட்ரோ ரெயிலில் ஏறிவிட்டேன். முன்பு 120 கிலோவில் இருந்த போது இப்படி ஒரு நிகழ்வை யோசித்து கூட பார்க்க முடியாது. அப்போது நான் ஒரு பாண்டா போல இருந்தேன். நான் தினமும் கடினமாக உழைத்தேன். இன்றும் அப்படித்தான் எனது உடல்நிலையிலும், உடல் தகுதியிலும் நிறைய செலவிடுகிறேன் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News