சர்வதேச யோகா தினம் கோலாகலம்: மத்திய அமைச்சர்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பு
- மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.
- காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.
இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் பங்கேற்று யோகா செய்தனர்.
மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.
இந்தோ-திபெத் எல்லை போலீசார் 15,000 அடி உயரத்தில் உள்ள வடக்கு சிக்கிமில் உள்ள முகுதாங் சப் செக்டார் என்ற இடத்தில் யோகா செய்தனர்.
அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஹிசாரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.
#WATCH | Haryana CM Nayab Singh Saini performs Yoga at a Yoga event in Hisar, on the occasion of International Day of Yoga. pic.twitter.com/FSYI1jjIZz
— ANI (@ANI) June 21, 2024
காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்ய உள்ளனர்.