ஸ்கூட்டரில் 'ஷவர்' பொருத்திய வாலிபர்- வைரல் வீடியோ
- ஸ்கூட்டரில் உள்ள தற்காலிக ஷவரில் இருந்து விழும் தண்ணீரில் குளித்து கொண்டு செல்வது போன்று காட்சிகள் உள்ளது.
- வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு வீசும் வெப்ப அலையை சமாளிக்க முடியாமல் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் வெப்ப அலையை சமாளிக்க வாலிபர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் தற்காலிகமாக 'ஷவர்' பொருத்திய வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த பயனர் ஒருவர் பதிவு செய்துள்ள அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் சாலையில் ஸ்கூட்டரில் செல்கிறார். அவர் வெப்ப அலையை சமாளிப்பதற்காக தனது ஸ்கூட்டரில் ஒரு பிளாஸ்டிக் கேனில் தண்ணீர் வைத்துக்கொண்டு அதில் சில கருவிகளை சேர்த்து அதனுடன் ஒரு ஷவரை பொருத்தி உள்ளார். இதன் மூலம் அந்த வாலிபர் ஸ்கூட்டரில் சவாரி செல்லும் போது வெப்ப அலையை சமாளிப்பதற்காக ஸ்கூட்டரில் உள்ள தற்காலிக ஷவரில் இருந்து விழும் தண்ணீரில் குளித்து கொண்டு செல்வது போன்று காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.