வெள்ள பாதிப்புகளை குறித்து நேரலையில் பேசியபடி ஆற்றில் விழுந்த செய்தியாளர்.. வைரல் வீடியோ
- ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து செய்தி வழங்கிக்கொண்டிருந்தார்
- கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 96 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 5.98 லட்சம் மக்கள் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மாநிலத்தில் பல பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைக்காட்சி நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் ஒருவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
கேமராவை பார்த்தபடி பேசிக்கொண்டிருக்க்கும் போது ஈரமான மணல் பகுதியால் நிலைதடுமாறி அவர் ஆற்றில் விழுந்தார். சமாளித்துக்கொண்டு நீந்தி வந்த அவரை கிராம மக்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் மேலே வர முடியாமல் அவர் திணறினார். கடைசியாக ஒருவழியாக சமாளித்துக்கொண்டு கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.