இந்தியா

பிம்ஸ்டெக் உச்சிமாநாடு நிறைவு: இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி

Published On 2025-04-04 22:11 IST   |   Update On 2025-04-04 22:11:00 IST
  • பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டை நிறைவு செய்த பிரதமர் மோடி இலங்கை சென்றடைந்தார்.
  • பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும்.

புதுடெல்லி:

வங்காள விரிகுடா கடலை எல்லையாகக் கொண்டுள்ள இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளன. இந்தக் கூட்டமைப்பு பிம்ஸ்டெக் என அழைக்கப்படுகிறது.

இதற்கிடையே, பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6-வது உச்சி மாநாடு தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இந்நிலையில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டை நிறைவு செய்து தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இலங்கை சென்றடைந்தார். அங்கு அவருக்க் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மூன்று நாள் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி 6-ம் தேதி பயணத்தை நிறைவு செய்கிறார்.

இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் அனுரா குமார தசநாயக, பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரியா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

மேலும், இந்திய நிதி உதவியுடன் திரிகோணமலை மாவட்டம் சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 2015ம் ஆண்டு முதல் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும்.

Tags:    

Similar News