இந்தியா

வீடு, வாகனங்களுக்கான வட்டி உயருமா? ஆர்.பி.ஐ. கவர்னர் விளக்கம்

Published On 2024-06-07 05:37 GMT   |   Update On 2024-06-07 05:37 GMT
  • கடந்த ஆண்டை விட கோதுமை கொள்முதல் அதிகரித்துள்ளது.
  • உலக உணவுப் பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

புதுடெல்லி:

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும்.

* பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.

* ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன்களின் வட்டி உயராது.

* தொழில்துறை உலோகங்களின் விலைகள் நடப்பு காலாண்டில் இதுவரை இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

* கடந்த ஆண்டை விட கோதுமை கொள்முதல் அதிகரித்துள்ளது.

* உலக நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தியா வளர்ச்சிக் கண்டு வருகிறது. இருந்தாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

* உலக உணவுப் பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

* கோதுமை, பார்லி, ஓட்ஸ் உள்ளிட்டவைகளின் வருகையால் பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் தேவையை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags:    

Similar News