இந்தியா

உங்களை வரவேற்க ஆந்திரா தயாராக உள்ளது: ஐடி நிறுவனங்களுக்கு நாரா லோகேஷ் அழைப்பு

Published On 2024-07-17 16:27 GMT   |   Update On 2024-07-17 16:27 GMT
  • தனியார் தொழில் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதா.
  • கர்நாடகாவில் இருந்த இடம்பெயர விரும்பினால் விசாகப்பட்டினத்திற்கு வரலாம்.

கர்நாடகாவில் அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அம்மாநில மந்திரிசபை ஒப்புதல் வழங்கியதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

சித்தராமையா இது தொடர்பான தகவல்களை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையாக விமர்சனம் எழுந்தது. இதனால் எக்ஸ் பக்க பதிவை நீக்கினார்.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமும் (Nasscom- National Association of Software and Service Companies) எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஐடி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நாரா லோகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "உங்களுடைய ஏமாற்றத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. விசாகப்பட்டினத்திற்கு உங்களுடைய நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய அல்லது மாற்ற நாங்கள் வரவேற்கிறோம்.

உங்களுக்க சிறந்த வசதிகளை செய்து தருகிறோம். தடையில்லா மின்சாரம், கட்டமைப்புகள் உருவாக்கி தருகிறோம். உங்களுக்கு தேவையான அறிவு சார்ந்த ஆட்கள் தேர்வுக்கு எந்த தடையும் அரசு விதிக்காது. உங்களை வரவேற்க ஆந்திரா தயாராக உள்ளது. தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்!" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மசோதாவை நிறுத்தி வைத்துள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News