இந்தியா

நாய் கடித்து 6 மாதங்களுக்கு பிறகு நாய் போல் குரைத்த தொழிலாளி

Published On 2022-11-05 05:48 GMT   |   Update On 2022-11-05 10:35 GMT
  • நாய் போல் குரைத்த நபருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • அறிகுறி ஏற்பட்ட பின்பு நோயாளிக்கு லாரிங்கோஸ்பாம் ஏற்படும்.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தை அடுத்த கட்டாக், உடய்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்பியூரா. தொழிலாளி. இவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாய் கடித்தது.

நாய் கடிக்காக ராஜேஷ்பியூரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவில்லை. இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்த போது திடீரென நாய் போல் குரைக்க தொடங்கினார்.

இதை கேட்டதும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நாய் கடித்ததும் உடனடியாக அவர் சிகிச்சை பெறாததே இதற்கு காரணம் என்றனர்.

மேலும் நாய் போல் குரைத்த நபருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஹைட்ரோபோபியா என்போம். இந்த அறிகுறி ஏற்பட்ட பின்பு நோயாளிக்கு லாரிங்கோஸ்பாம் ஏற்படும். இதன்காரணமாக தொண்டை வறண்டுவிடும். அப்போது அவரது குரல் நாய் குரைப்பது போல மாறும் என்றனர்.

Tags:    

Similar News