நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு 1593 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்- கூட்டணிகளுடன் சேர்ந்து 20 மாநிலங்களில் ஆட்சி
- காங்கிரசில் நாடு முழுவதும் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை விட 2.4 மடங்கு அதிகமாகும்.
- 7 மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணிகளுடன் ஆட்சி நடக்கிறது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது. அந்த கட்சி மொத்தம் 132 இடங்களை கைப்பற்றியது.
இதன் மூலம் நாடு முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு 1593 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இது காங்கிரசில் நாடு முழுவதும் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை விட 2.4 மடங்கு அதிகமாகும்.
இந்தியா கூட்டணிக்கு நாடு முழுவதும் 965 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதே நேரத்தில் பா.ஜ.க. இல்லாமல் அந்த கூட்டணியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் 515 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்.
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து 20 மாநிலங்களில் ஆட்சி நடக்கிறது.
அருணாச்சல பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், அரியானா, மத்திய பிரதேசம், மணிப்பூர், ஒடிசா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய 13 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம் ஆகிய 7 மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணிகளுடன் ஆட்சி நடக்கிறது.
அதே நேரத்தில் கர்நாடகா, தெலுங்கானா இமலாச்சல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 7 மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஆட்சி நடக்கிறது.