இந்தியா

பெங்களூரு வந்தார் ராகுல் காந்தி- அவதூறு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிறார்

Published On 2024-06-07 03:48 GMT   |   Update On 2024-06-07 03:48 GMT
  • ராகுல் காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் மீது பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பா.ஜ.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
  • வழக்கு விசாரணை கடைசியாக கடந்த 1-ந்தேதி நடைபெற்றது.

கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். இது தான் அவர்களின் பிரசாரத்தில் முக்கிய விஷயமாக இடம்பெற்றது. பா.ஜ.க.வின் தோல்விக்கு இந்த குற்றச்சாட்டு முக்கியமான காரணமாக அமைந்தது.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் மீது பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பா.ஜ.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை கடைசியாக கடந்த 1-ந்தேதி நடைபெற்றது. அன்றைய தினம் முதல்-மந்திரி சித்தராமையா, ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் முதல்-மந்திரி சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேரில் ஆஜரானார்கள். அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வக்கீல், அவர் நேரில் ஆஜராக வாய்தா கேட்டார். இதையடுத்து 7-ந்தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, பெங்களூரு கோர்ட்டில் இன்று நேரில் ஆஜராக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறபட்டார். பெங்களூர் வந்த ராகுலை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News