இந்தியா

மத்திய பட்ஜெட் 2024- இலவச உணவு தானிய திட்டம் நீட்டிப்பு

Published On 2024-07-23 06:12 GMT   |   Update On 2024-07-23 06:12 GMT
  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன், கல்வியை வழங்க ரூ.1.48 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம்.
  • வேளாண்துறைக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

இதன் முக்கிய நிகழ்வான 2024- 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

* பிரதமரின் இலவச உணவு வழங்கும் கரீப் கல்யாண் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.

* இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன், கல்வியை வழங்க ரூ.1.48 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம்.

* நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் 4 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம்.

* வேளாண்துறைக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு.

* வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் 9 வகையான முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

* காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத பயிர்களை அறிமுகம் செய்ய திட்டம்.

* பருவநிலையை தாக்குப்பிடித்து வளரும் 102 வகையான புதிய பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

* 1 கோடி பேரை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News