இந்தியா

தாய் உயிரிழந்த போதும் வாக்களித்துவிட்டு இறுதிச் சடங்கு செய்த மகன்

Published On 2024-06-01 11:02 GMT   |   Update On 2024-06-01 11:02 GMT
  • 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.
  • தாய்க்கு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்தனர். இன்று மட்டும் 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த வகையில், பீகார் மாநிலத்தின் ஜெகானாபாத்தின் தேவ்குல்லி கிராமத்தை சேர்ந்தவர் மிதிலேஷ் யாதவ். இவரது தாயார் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். எனினும், இவர் முதலில் வாக்களித்து விட்டு அதன்பிறகு தாயாருக்கு இறுதிச் சடங்கு செய்வதென முடிவு செய்துள்ளார். அதன்படி இவரது குடும்பத்தினர், முதலில் வாக்களித்து விட்டு, அதன்பிறகு தான் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

இது குறித்து பேசிய மிதிலேஷ் யாதவ், "உயிரிழந்த தாய் மீண்டும் வரப்போவதில்லை. அவருக்கான இறுதிச் சடங்குகள் காத்திருக்கலாம், ஆனால் தேர்தல் காத்திருக்காது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் தேர்தல் வரும்."

"இதனால் எங்களது குடும்பத்தினர் முதலில் வாக்களித்துவிட்டு, அதன்பிறகு எங்களது தாயாரின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News