கிரிக்கெட் (Cricket)

சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது மும்பை அணி

Published On 2024-12-15 15:36 GMT   |   Update On 2024-12-15 15:36 GMT
  • மத்திய பிரதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது.
  • மும்பை அணி 17.5 ஓவர்களில் 180 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

17-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை - மத்திய பிரதேசம் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 81 ரன்கள் அடித்தார். மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர், ராய்ஸ்டன் டயஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 48 ரன்களும் ரஹானே 37 ரன்களும் அடித்தனர்.

Tags:    

Similar News