கிரிக்கெட் (Cricket)

3வது டெஸ்ட்: நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 347 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2024-12-14 23:16 GMT   |   Update On 2024-12-14 23:16 GMT
  • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 347 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • இங்கிலாந்தின் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஹாமில்டன்:

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் வில் யங் ஆகியோர் களம் இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் வில் யங் 42 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடி அரை சதமடித்த டாம் லாதம் 63 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் 44 ரன்னிலும் அவுட் ஆனார்.

ரச்சின் ரவீந்திரா 18 ரன், டேரில் மிட்செல் 14 ரன், டாம் பிளெண்டல் 21 ரன், கிளென் பிலிப்ஸ் 5 ரன் எடுத்து அவுட்டாகினர்.

கடைசி கட்டத்தில் சாண்ட்னெர் நிலைத்து நின்று ஆடி அரை சதம் கடந்து 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 347 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News