விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 3வது சுற்றில் குகேஷ் வெற்றி

Published On 2024-11-27 16:52 GMT   |   Update On 2024-11-27 16:52 GMT
  • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
  • 3-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார் குகேஷ்.

சிங்கப்பூர்:

இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் டிங் லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என முன்னிலை பெற்றார். நேற்று நடந்த 2வது சுற்று டிராவில் முடிந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். இதில் டிங் லிரெனை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தார் குகேஷ்.

இதுவரை முடிந்துள்ள 3 போட்டிகளில் இருவரும் தலா 1.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News