என் மலர்
சிங்கப்பூர்
- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது அதிதீவிர குற்றம் ஆகும். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகின்றன. எனினும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. அந்தவகையில் இந்தியர்களான ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அந்த 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
- தென்கொரியாவின் ஏர் பூசன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சமீபத்தில் தீப்பிடித்தது.
- பாதுகாப்பு கருதி பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்து ஏர் பூசன் நிறுவனம் உத்தரவிட்டது.
சிங்கப்பூர்:
தென்கொரியாவின் ஏர் பூசன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சமீபத்தில் தீப்பிடித்தது. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் அந்த விமானம் பயன்படுத்தாத முடியாத அளவுக்கு சேதமடைந்தது. இதனையடுத்து விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி செல்போன் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்து ஏர் பூசன் நிறுவனம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தைவானின் ஈவா ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த உத்தரவை அமல்படுத்தியது.
அந்தவரிசையில் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. அதன்படி 100 வாட் திறன் வரை கொண்ட பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்லலாம். ஆனால் தங்களுடன் கொண்டு செல்லும் கைப்பையில் அதனை கொண்டு செல்லக்கூடாது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை ஜின்யு வாங் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் சீன வீராங்கனை ஜின்யு வாங், கனடா வீராங்கனை ரிபேகா மரினோ உடன் மோதினார்.
இதில் ஜின்யு வாங் 6-4, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
அடுத்த சுற்றில் ஜின்யு வாங் ஆஸ்திரேலிய வீராங்கனை மாயா ஜாயிண்டை சந்திக்க உள்ளார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
- குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
13 சுற்றுகள் முடிவில் குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தார்கள். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.
இந்நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
14வது சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 7.5 புள்ளிகள் பெற்று குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
18 வயதிலேயே குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பட்டம் வென்ற நிலையில், குகேஷ் ஆனந்த கண்ணீர் சிந்தியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது குறித்து குகேஷ் கூறியதாவது:-
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது 2 வருட தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன்.
ஒவ்வொரு செஸ் வீரருக்கும் உள்ள கனவுதான் இன்று எனக்கு நனவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
- கடைசி சுற்றில் டிங் லிரெனை வீழ்த்தி உலக செஸ் சா்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
13 சுற்றுகள் முடிவில் குகேசும், லிரெனும் தலா இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்று இருந்தார்கள். மற்ற அனைத்து சுற்றுகளும் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.
இந்நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 58 வது காய் நகர்த்தலுக்குப் பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதனால் 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார். 14 -வது சுற்றில் சுமார் 4 மணி நேரம் போராடி குகேஷ் வெற்றியை ருசித்துள்ளார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் குகேஷுடனான ஆட்டத்தில் சீனாவின் டிங் லிரென் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 7 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 5 டிரா என 3.5 புள்ளிகள் பெற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 8-வது சுற்றில் குகேஷ், டிங் லிரென் இடையிலான போட்டி மீண்டும் டிராவில் முடிந்தது.
முதல் ஆட்டத்தில் டிங் லிரெனும், 3வது ஆட்டத்தில் குகேஷும் வெற்றி பெற்றனர். 2, 4, 5, 6, 7, 8-வது ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
இதுவரை முடிந்துள்ள 8 போட்டிகளில் இருவரும் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 7.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- 3-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனுடன் நடந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 6 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா என 3 புள்ளிகள் பெற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 7-வது சுற்றில் குகேஷ், டிங் லிரென் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டி சுமார் 5 மணி நேரத்தை கடந்தது.
முதல் ஆட்டத்தில் டிங் லிரெனும், 3வது ஆட்டத்தில் குகேஷும் வெற்றி பெற்றனர். 2, 4, 5, 6, 7-வது ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
இதுவரை முடிந்துள்ள 7 போட்டிகளில் இருவரும் தலா 3.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 7.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 40-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிந்தது.
- 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 3 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 1.5 புள்ளிகள் பெற்றனர். நேற்று முன் தினம் நடந்த 4-வது சுற்று டிராவில் முடிந்தது.

4 போட்டிகளில் இருவரும் தலா 2 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில் நேற்று 5 வது சுற்று நடைபெற்றுள்ளது. இதில் டிங் லிரென் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.
22 நகர்த்தல் வரை ஆட்டம் சமநிலையில் இருந்தது. 23வது நகர்த்தலில் குகேஷ் சற்று சறுக்கினார். ஆனால் அடுத்தடுத்த நகர்த்தலில் அவர் மீண்டு வந்த நிலையில் 40-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிந்தது.

எனவே ஐந்து சுற்றுகள் முடிவில், குகேஷ் மற்றும் டிங் லிரென் ஆகிய இருவரும் 2.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- 4-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனுடன் நடந்த ஆட்டம் டிராவானது.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 3 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 1.5 புள்ளிகள் பெற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் ஆடினார். இதில் டிங் லிரெனுடனான ஆட்டத்தை டிரா செய்தார்.
இதுவரை முடிந்துள்ள 4 போட்டிகளில் இருவரும் தலா 2 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- 3-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார் குகேஷ்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் டிங் லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என முன்னிலை பெற்றார். நேற்று நடந்த 2வது சுற்று டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். இதில் டிங் லிரெனை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தார் குகேஷ்.
இதுவரை முடிந்துள்ள 3 போட்டிகளில் இருவரும் தலா 1.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- இந்தப் போட்டியில் குகேஷ், சீனாவின் டிங் லிரென் ஆகியோர் மோதினர்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் டிங் லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என முன்னிலை பெற்றார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய 2-வது சுற்றில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் ஆடினார். இதில் குகேஷ்- டிங் லிரென் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
முதல் போட்டியில் தோல்வி அடைந்த குகேஷ், இதன்மூலம் மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார் என ரசிகர்கள் தெரிவித்தனர்.
- அரசு முறை பயணமாக புரூணே சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.
- சிங்கப்பூரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்தியா-சிங்கப்பூர் இடையிலான நட்புறவை மேம்படுத்துவது, மிகமுக்கிய விவகாரங்களில் கூட்டணியை ஆழப்படுத்துவது மற்றும் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "சிங்கப்பூரில் தரையிறங்கினேன். இந்தியா-சிங்கப்பூர் நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக ஏராளமான சந்திப்புகளை எதிர்நோக்கியுள்ளேன்."
"இந்தியாவின் சீர்திருத்தங்கள் மற்றும் யுவ சக்தி திறமை நம் நாட்டை சிறந்த முதலீட்டு இடமாக மாற்றுகிறது. இதுதவிர நெருங்கிய கலாச்சார உறவுகளையும் எதிர்பார்க்கிறோம்," என பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அங்கு வாழும் இந்திய வளம்சாவளியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியர்கள் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேலும், அவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி அவரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டோல் இசைகருவியை இசைத்து மகிழ்ந்தார்.