search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக செஸ் சாம்பியன்ஷிப் 7வது சுற்று: குகேஷ், டிங் லிரென் இடையிலான ஆட்டம் டிரா
    X

    உலக செஸ் சாம்பியன்ஷிப் 7வது சுற்று: குகேஷ், டிங் லிரென் இடையிலான ஆட்டம் டிரா

    • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • 3-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனுடன் நடந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார்.

    சிங்கப்பூர்:

    இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 6 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா என 3 புள்ளிகள் பெற்றனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 7-வது சுற்றில் குகேஷ், டிங் லிரென் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டி சுமார் 5 மணி நேரத்தை கடந்தது.

    முதல் ஆட்டத்தில் டிங் லிரெனும், 3வது ஆட்டத்தில் குகேஷும் வெற்றி பெற்றனர். 2, 4, 5, 6, 7-வது ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.

    இதுவரை முடிந்துள்ள 7 போட்டிகளில் இருவரும் தலா 3.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 7.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×