விளையாட்டு
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய பெண்கள் ஜோடி தோல்வி
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்- திரிஷா ஜாலி ஜோடி, சீனாவின் டான் நிங்-லியு ஷெங் ஷு ஜோடி மோதியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன ஜோடி 21-14, 21-10 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.