விளையாட்டு
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டி உடன் மோதினார்.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் லக்ஷயா சென் 21-13, 21-10 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.