பாரிஸ் ஒலிம்பிக் 2024

'தங்கம் வென்றதும் நம்ம பையன்தான்'.. நீரஜ் சோப்ராவின் தாய் நெகிழ்ச்சி

Published On 2024-08-09 03:51 GMT   |   Update On 2024-08-09 03:51 GMT
  • நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், எங்களுக்கு இந்த வெள்ளி தங்கத்துக்கு நிகரானது
  • எல்லோருக்கும் அவர்களின் நாள் என்பது ஒன்று இருக்கும், இது பாகிஸ்தானின் நாள்

நிறைவு பெரும் தருவாயில் உள்ள பாரீஸ் ஒலிம்பிக்சில் நேற்று நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த வருட ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இதுவரை இந்தியா 4 வெண்கலம் வென்றுள்ள நிலையில், நீரஜ் முதல் வெள்ளியை வென்றுள்ளார். நீரஜ் சோப்ராவின் இந்த வெற்றிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

நீரஜின் தாய் சரோஜா தாய் மகனின் வெற்றி குறித்து பேசுகையில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், எங்களுக்கு இந்த வெள்ளி தங்கத்துக்கு நிகரானது, நீரஜுக்கு காயம் ஏற்பட்டிருந்தது, எனவே இந்த அளவு விளையாடியதே மகிழ்ச்சிதான். [பாகிஸ்தான் வீரர்] நதீம் தங்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சியே. அவரும் மகன் போலத்தான். அனைவரும் [வீரர் வீராங்கனைகளும்] எனது பிள்ளைகள்தான். வீட்டுக்கு வந்ததும், நீரஜூக்கு பிடித்த உணவைச் சமைத்துத் தருவேன் என்று தெரிவித்துள்ளார்.

நீரஜ் சோப்ராவின் வெற்றி குறித்துப் பேசியுள்ள அவரது தந்தை சதீஷ் குமார், எல்லோருக்கும் அவர்களின் நாள் என்பது ஒன்று இருக்கும், இது பாகிஸ்தானின் நாள், நாம் வெள்ளி வென்றுள்ளோம். அதுவே மிகவும் பெருமைக்குரியது என்று தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடத்த ஒலிம்பிக்சில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News