தமிழ்நாடு செய்திகள்

புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி: விஜய் நேரில் சென்று நலம் விசாரிப்பு

Published On 2023-11-03 07:06 IST   |   Update On 2023-11-03 07:06:00 IST
  • விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை தலைமை ஏற்று நடத்தி வருகிறார்
  • நேற்று முன்தினம் விஜய் கலந்து கொண்ட லியோ வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும், நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று, புஸ்ஸி ஆனந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

விஜய் சினிமாவை கடந்து விரைவில் அரசியலில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு ஏற்றவாறு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடிகர் விஜய் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட, அனைத்து நிகழ்ச்சிகளையும் புஸ்ஸி ஆனந்த் முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நேற்றுமுன்தினம் நடந்த லியோ வெற்றி விழா நிகழ்ச்சியைத்தொடர்ந்து, ஏற்பட்ட அதிக சோர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேற்றுமுன்தினம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'லியோ' படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜயுடன் நடிகர்கள் அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, மடோனா செபாஸ்டியன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News