தமிழ்நாடு

பழனி முருகன் கோவில் ரோப்காரில் புதிதாக பொருத்தப்பட்ட பெட்டிகளை காணலாம்

பழனி முருகன் கோவில் ரோப்காரில் புதிய பெட்டிகள்- பக்தர்கள் ஆனந்த பயணம்

Published On 2022-09-15 03:26 GMT   |   Update On 2022-09-15 03:26 GMT
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி ரோப்கார் நிலையத்துக்கு புதிதாக 10 பெட்டிகள் வாங்கப்பட்டன.
  • ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி, கடந்த 10-ந்தேதி நடந்தது.

பழனி:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு, அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் சேவை உள்ளது. கிழக்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் சென்று வருவதற்கு தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி ரோப்கார் நிலையத்துக்கு புதிதாக 10 பெட்டிகள் வாங்கப்பட்டன. இதனையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி இரு வழிகளிலும் (அதாவது மேல்நோக்கி செல்ல ஒரு பெட்டியும், கீழ்நோக்கி வருவதற்கு ஒரு பெட்டியும்) தலா ஒரு புது ரோப் பெட்டியை பொருத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இது, வெற்றிகரமாக அமைந்ததால் விரைவில் அனைத்து பெட்டிகளும் ரோப்காரில் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி, கடந்த 10-ந்தேதி நடந்தது. அப்போது, ரோப்காரில் 4 புதிய ரோப் பெட்டிகள் பொருத்தப்பட்டன. அதாவது ஒரு வழியில் 3 பெட்டிகளும், மற்றொரு வழியில் ஒரு பெட்டியும் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 11-ந்தேதி முதல் வழக்கம்போல் ரோப்கார் இயங்கியது. நேற்று மதியம் பராமரிப்பு பணியின் போது மீதியுள்ள 2 பெட்டிகளை பொருத்தி சோதனை ஓட்டம் செய்தனர். இதனையடுத்து பக்தர்கள் சேவை தொடங்கியது. இதனால் 8 புது பெட்டிகளில் பக்தர்கள் ஆனந்த பயணம் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News