தமிழ்நாடு செய்திகள்

கோவில்பட்டி பா.ஜனதா பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Published On 2023-03-23 11:03 IST   |   Update On 2023-03-23 11:03:00 IST
  • அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை கோவில்பட்டியில் உள்ள சிவந்திநாராயணன் வீட்டிற்கு வந்தனர்.
  • 7 மணிக்கு தொடங்கிய சோதனை 11 மணியை தாண்டியும் நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சிவந்திநாராயணன். இவர் பா.ஜனதா பட்டியலின மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை கோவில்பட்டியில் உள்ள சிவந்திநாராயணன் வீட்டிற்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக சென்னையில் இருந்து 5 அதிகாரிகள் கார் மூலம் வந்தனர்.

7 மணிக்கு தொடங்கிய சோதனை 11 மணியை தாண்டியும் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அவரது வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சோதனை நடந்த போது பா.ஜனதா பட்டியலின மாநில பொதுச்செயலாளர் சிவந்திநாராயணன் வீட்டில் இல்லை. 

Tags:    

Similar News