சுதந்திரத்திற்குப் பிறகு அதிகாரத்தில் இருந்தவர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பற்றி வெட்கப்பட்டார்கள்- பிரதமர் மோடி
- 11,600 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.
- அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை.
சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்களால் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக தங்கள் கலாச்சாரத்தைப் பற்றியே வெட்கப்படும் போக்கை உருவாக்குகிறார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
11,600 கோடி மதிப்பிலான திட்டங்களை வெளியிட்டு கவுகாத்தியில் நடந்த மாபெரும் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த காலத்தை அழித்து எந்த நாடும் முன்னேற முடியாது. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது" என்றார்.
மேலும் அவர், " தொடங்கப்பட்ட திட்டங்கள் வடகிழக்கு மட்டுமின்றி தெற்காசியாவின் மற்ற பகுதிகளிலும் இணைப்பை பலப்படுத்தும்.
கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் அமைதி திரும்பியுள்ளது. 7,000க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களை கீழே இறக்கிவிட்டு முக்கிய நீரோட்டத்திற்கு திரும்பியுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்" என்றார்.