தமிழ்நாடு
திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் நெஞ்சத்தை உருக்குகிறது- கமல்
- பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக அதி மிக கனமழை பெய்தது. இதனால் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் சிக்கிய நிலையில் அவர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் நெஞ்சத்தை உருக்குகிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் விரைந்து கிடைக்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.